2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (06) காலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பகுதியிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தாண்டை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களை தேடி பொலிஸார் விசேட சோதனைகளையும் முற்றுகைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் கீழ், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையகத்தின் பொறுப்பதிகாரி என்.ஏ.குணவர்த்தனவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையை மேற்கொண்டனர்.

இதன்போது கசிப்பு உற்பத்திக்காக வைக்கப்பட்டிருந்த 12 பரல் கோடாக்கள் மீட்கப்பட்டதுடன், கசிப்பு உற்பத்தி செய்யும் பொருட்களும் மீட்கப்பட்டன. 12 பரல்களிலும் 24,000 லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முற்றுகையின் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலும் தெரிவித்தர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X