2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஓய்வுநிலைப் கல்விப்பணிப்பாளரை தாக்கியவர் கைது

Editorial   / 2023 ஜூன் 22 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வுநிலைப் கல்விப்பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம் முக்தாரை கடந்த (18)ம் திகதி கொலை செய்ய எத்தனித்தவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர். எஸ். எல். சம்சுதீனின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் கே. எஸ். மேகவர்ன மற்றும் உப-பொலிஸ் பரிசோதகர் ஏ. எல். றஊப் ஆகியோர் அடங்கிய குழுவும் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பொருட்டாக சந்தேசக நபர்   கைது செய்யபட்டுள்ளார்.  

குறித்த கல்விப்பணிப்பாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) மாளிகைக்காட்டில் உள்ள பிஸ்மில்லா பேக்கரியில் கொத்து ரொட்டியினை வாங்கிக்கொண்டு சாயந்தமருது நீர்வழங்கல் காரியாலயத்திற்கு அருகாமையில் உள்ள தனது வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிலில் தனது பேரப்பிள்ளையுடன் வருகைதந்தது கொண்டிருந்தார்.

அவரது வீட்டின் அருகாமையில் உள்ள வீதியில் ஒழிந்திருந்த நபர்,   தான் ஒழித்து வைத்திருந்த கத்தியினால் கல்விப்பணிப்பாளரின் கழுத்தில் அறுத்துவிட்டு  தப்பிச்செல்ல முற்பட்ட வேளை காயமடைந்த கல்விப்பணிப்பாளர்  தன்னைத் தாக்கிய நபரை துரத்திச் சென்றுள்ளார்.

எனினும், தாக்கிய நபர் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார்.   வீட்டுக்கு வருகைதந்த கல்விப்பணிப்பாள சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் முதலுதவியைப் பெற்றுக் கொண்டு   அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சுகம் தேறிய நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

சம்பவத்தை கேள்வியுற்று சிலமணி நேரத்திற்குள் விரைந்து செயற்பட்ட சாய்ந்தமருது பொலிஸார் குறித்த நபர் சென்ற வீதிகளில் உள்ள சிசிரிவி கண்கானிப்பு கமெராக்களை பரிசோதனையிட்டு தடயங்களை திரட்டியதுடன் அம்பாறை தடையவியல் பொலிஸாருடன் இணைந்து சந்தேக நபரை இனங்கண்டு கொண்டனர்.

பல்வேறு கோணங்களில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் உறுதிப்படுத்திக் கொண்டு சந்தேகநபரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன் விளைவாக குறித்த சந்தேச நபர் புதன்கிழமை (21)   சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X