2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஓட்டோவை தீயிட்டு, எச்சரிக்கை ஒட்டினர்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான், கனகராசா சரவணன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் இன்று (20) அதிகாலை 03 மணியளவில் ஓட்டோ ஒன்று தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.சந்திரகுமார தெரிவித்தார்.

அத்துடன், எச்சரிக்கை செய்து துண்டுப் பிரசுரங்களும் வீட்டின் சுவரில் ஒட்டப்பட்டுள்ளன.

மீராவோடை எம்.பி.சி.எஸ். வீதியை சேர்ந்த முகம்மது லத்திப் முகம்மது நிப்ராஸ் (வயது – 28) என்பவருக்குச் சொந்தமான ஓட்டோவே தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த போது, வெடிப்புச் சத்தத்துடன், ஜன்னல் வழியாக வெளிச்சம் தெரிவதை அவதானித்த ஓட்டோ உரிமையாளர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர்.

இதன்போது, ஓட்டோ தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருப்பதை அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும், ஓட்டோ முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், வீட்டின் முன் பகுதியும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு, வீட்டுக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .