2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஓட்டமாவடியில் 36 தொற்றாளர்கள்

Princiya Dixci   / 2021 ஜனவரி 10 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பபு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (10) வரை 36 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கெனவே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது உறவினர்கள் 84 பேருக்கு, உலமா சபை கட்டிடத்தில் நேற்று (09) மாலை செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளர்.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில், பிரதேச செயலகம், பிரதேச சபை, இராணுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் சுகாதார தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .