2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஓட்டமாவடி பிரதேச சபை உப தவிசாளர் இராஜினாமா

Princiya Dixci   / 2021 மார்ச் 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை தனது உப தவிசாளர் பதவியை நேற்று (22) இராஜினாமா செய்தார். 

2018 ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாக யூ.எல்.அஹ்மட் லெப்பை தெரிவுசெய்யப்பட்டார்.

சுழற்சி முறையில் உறுப்பினர்களை நியமிப்பது என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக, ஏ.எச்.நுபைல் என்பவருக்கு விட்டுக்கொடுப்பு செய்யவே தான் இராஜினமா செய்துள்ளதாக யூ.எல்.அஹ்மட் லெப்பை  தெரிவித்தார்.

இராஜினாமா செய்யும் நிகழ்வில், புதிய உறுப்பினராக பதவியேற்கவுள்ள ஏ.எச்.நுபைல், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர், ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர் ஏ.எல்.பைரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X