2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 மார்ச் 23 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் காத்தான்குடி கடற்கரை வீதியில் நேற்றிரவு 10 மணியளவில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பபட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து9 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .