Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 22 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறுபொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேகநபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வியாழக்கிழமை (21 ) இரவு கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது கல்முனைக்குடி 9ஆம் பிரிவு மதிரிஸா வீதியில் வசிக்கும் 26 வயதுடைய நபர் 970 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடனும் கல்முனைக்குடி 2 ஆம் பிரிவு கிறீன் பீல்ட் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேக நபர் 870 மில்லி கிராம் போதைப் பொருளுடனும் கைதாகினர்.
கைதான 2 சந்தேகநபர்களையும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐஸ் போதைப்பொருள்கள் அதிகளவாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .