2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் பொலிஸ் நிலைய பணிகள் ஆரம்பம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 11 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக் கொண்டதால் மூடப்பட்டிருந்த ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பணிகள், இன்று (11) தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அடுத்து, அங்கு கடமையில் இருந்த 40 பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

ஏறாவூர் பொலிஸாருக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது, கடந்த டிசெம்பர் 30ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து, அப்பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பொலிஸார் 7 பேரும் தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்சமயம் ஏறாவூர் பொலிஸ் நிலையம் தனது வழமையான பணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .