Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 22 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகர சபை பதவிநிலை உத்தியோகத்தர் எனக் கூறி எவராவது கையூட்டுகள் கோரினால் அதனை வழங்க வேண்டாம் எனவும் அது தொடர்பில் உடனடியாக எம்மிடம் முறைப்பாடு செய்யுமாறும் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரணபவன் கேட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாநகர சபை பதவி நிலை சிரேஷ்ட உத்தியோகத்தர் எனக் கூறி ஒரு சிலரால் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் பொருள்கள் கையூட்டாக கோரப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் என்னிடம் கிடைக்கப்பட்டுள்ளன.
“இந்தச் செயற்பாடானது மக்களுக்கான சேவையைத் தூய்மையான கரம் கொண்டு வழங்கிக் கொண்டிருக்கும் எமது மட்டக்களப்பு மாநகர சபை , மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு களங்கம் விளைவிக்கும் ஒரு செயற்பாடாகவே அமைந்துள்ளது.
“சிகை அலங்கார நிலையத்தில் சென்று முடிதிருத்தம் செய்து விட்டு அதற்கான கட்டணம் செலுத்தாமல் வெளிவந்தமை, கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் இறைச்சி கொள்வனவு செய்த பின்னர் அதற்கான கட்டனம் செலுத்தாமல் வெளிவந்தமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
“இலஞ்சம் கோரல் அல்லது பொருள் இலஞ்சம் கோரல் தொடர்பாக எம்மிடம் முறைப்பாடு செய்யும் இடத்து குறித்த சட்டவிரோத நடவடிகைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை உடன் எடுக்கப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago