2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறல் தொடர்கிறது

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் அங்காங்கே சிலிண்டர்கள் மற்றும் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறுகின்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக பதிவாகி வருகின்றன.

அந்தவகையில், மட்டக்களப்பு, திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியிலும் இன்று (01) காலை 10 மணியளவில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

எரிவாயு அடுப்பை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து உறவினர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளை, அவர்களது சமையலறையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டதை உணர்ந்து அங்கு சென்று பார்த்தபோது, எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளமையைக் கண்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸாருக்கும் சுவிஸ் கிராம கிராம சேவகர் அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .