Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 26 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கான ஒழுங்கமைப்பு கைநூல், மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (25) மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அச்சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஏற்பாட்டாளர் பு.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.கருணாகரன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீட விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன் கலந்துகொண்டார்.
இதன்போது ஊடகவியலாளர்களின் பணிகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்கள் சார் கோரிக்கைகள் அடங்கியதான தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கான ஒழுங்கமைப்பு கைநூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீட விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன் சிறப்புரையாற்றியதுடன், பு.சசிகரன் நூல் தொடர்பான அறிமுகவுரையை நிகழ்த்தினார்.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட தொழில்சார் ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
46 minute ago
52 minute ago
2 hours ago