2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21ஆவது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில், மட்டு.ஊடக அமையத்தில் இன்று (19) அனுஷ்டிக்கப்பட்டது.

மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு,  ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளர் பு.சசிகரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

2,000ஆம் ஆண்டின் ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணத்தின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன், தனது வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

பிபிசி தமிழோசைஉள்ளிட்ட வானொலிகள், தமிழ் நாளிதழ்கள், ராவய உள்ளிட்ட சிங்கள வார இதழ்களிலும் ஆங்கில மொழியிலும் அவர் பணியாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .