2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

‘ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்’ கட்டுரைத் தொகுப்பு

Princiya Dixci   / 2022 மே 24 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

.எச்.ஹுஸைன் 

மட்டக்களப்பில் வைத்து 2004 ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18ஆவது ஞாபகார்த்த தினம், எதிர்வரும் 31ஆம் திகதி நினைவு கூரப்படவுள்ளது.

அதனை முன்னிட்டு, ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்
ஞாபகார்த்த நிகழ்வும் "ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்" கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும்  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெறவுள்ளன.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன்  தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில், மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணியளவில் இந்நகழ்வுகள் நடைம்பெறவுள்ளன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, நினைவுச் சுடரேற்றப்பட்டதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மௌன அஞ்சலியும் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், சிவராம் ஞாபகார்த்த மன்றமும் (சுவிஸ்) இணைந்து வெளியிடவுள்ள "ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்" கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் வரவேற்புரையை  கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய உப தலைவர் க.ஜெகதீஸ்வரனும், தலைமையுரைரய கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இ.பாக்கியராஜா நிகழ்த்தவுள்ளதுடன், நூல் வெளியீட்டுரையை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் இ.தேவஅதிரன் நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வுக்கு அனைத்து ஊடகவியலாளர்களையும், சமூக நலன் விரும்பிகள், மதகுருமார், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களையும் கலந்துகொள்ளுமாறு, ஒன்றியத்தின் செயலாளர் வ.சக்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .