2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

உறுப்பினர்களின் பதவிகள் பறிப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 27 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.எல்.ரெபுபாசம், நகர சபை உறுப்பினரான ஏ.எப்.பஜிஹா மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினரான எம்.எஸ்.எம்.ஜஃபர் ஆகியோரது உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் பதவிகள் காலியாகியுள்ளன.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.ரெபுபாசம்  மற்றும் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட ஏ.எப்.பஜிஹா ஆகியோர் ஏறாவூர் நகர சபைக்கு அக்கட்சியினால் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேற்குறித்த இருவரும், ஏறாவூர் நகர சபை தவிசாளர் தெரிவின் போது கட்சியினுடைய தீர்மானத்தைப் புறக்கணித்தும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டதால், சுதந்திரக் கட்சி அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகளை  மேற்கொண்டு, கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்து கட்சியில் இருந்தும் வெளியேற்றியது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மற்றுமோர் உறுப்பினரான எம்.எஸ்.எம்.ஜஃபர் என்பவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டதால், அக்கட்சி அவருக்கெதிராகவும் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு, உறுப்புரிமையையும் இரத்துச் செய்தது.

 இதன்படி, ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை போன்றவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்குறித்த உறுப்பினர்களின் பதவிகள் நீக்கப்பட்டமை குறித்து, அக்க்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்திருந்தார்.

இதற்கமைவாக, குறித்த உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக உள்ளமை இல்லாதொழிந்துள்ளதால் மேற்படி சபைகளில் அவர்களது உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளனர். இது குறித்து தெரிவத்தாட்சி அலுவலரின் அறிவித்தல் வர்த்தமானப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .