2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

உப்போடை வாவியில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2021 டிசெம்பர் 22 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

மட்டக்களப்பு தலைமையப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை வாவிப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம், இன்று (22) காலை மீட்க்கப்பட்டுள்ளது.

உப்போடையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வாவி பகுதியிலிருந்தே, மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் உருக்குலைந்துள்ளமையால் அடையாளம் காணப்படாத நிலையில் காணப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவைப் பெற்று பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மலசலக்கூடத்தின் தரை சறுக்கி வீழ்ந்தமையால் 44 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமும், ஜெயந்திபுரம் பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .