2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

உணவு நெருக்கடியை தவிர்க்க நெல் மூடைகள்

Freelancer   / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ. சக்தி        

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலத்துக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு  உணவு நெருக்கடியைக் குறைக்கும் முகமாக நெல் மூடைகள், களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து, புதன்கிழமை (07)  வழங்கப்பட்டன.

ஓந்தாச்சிமடம் வடக்கு, ஓந்தாச்சிமடம் தெற்கு, களுதாவளை மத்தி, களுதாவளை 02, களுதாவளை 03, களுதாவளை 04,  தேற்றாத்தீவு தெற்கு, பெரியகல்லாறு 02,  பெரியகல்லாறு மேற்கு ஆகிய மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் நெல்மூடைகள் வழங்கப்பட்டன.

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினத்தின் வழிகாட்டலில், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி காமினி யூட் இன்பராசாவின் ஒருங்கிணைப்பில் வட்டியற்ற இலகு கடன் அடிப்படையில் 173 நெல் மூடைகள் பயனாளிகளுக்கு இதன்போது வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .