2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இலவச உரம் விநியோகம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 23 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை விவசாய கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ், பெரும்போக நெற்செய்கையை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு, அரசாங்கத்தின் மூலம் இலவச உரம் விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தலைமையில் இலவச உரங்கள், விவசாயிகளுக்கு இன்று (23) வழங்கப்பட்டன.

இதன்போது 18,497 ஏக்கரில் பெரும்போக விவசாய செய்கைக்கு, மூன்று வகையான 39,000 உர மூடைகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டதாகவும் இதன்மூலம் 1,958 விவசாயிகள் நன்மை அடைவதாகவும் வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீத் தெரிவித்தார்.

வாகனேரி திட்டத்தின் கீழ் உள்ள பெரிய நீர்ப்பாசன காணிகள், மாதுறுஓயா வடிச்சலில் புணாணை மேற்கு கண்டங்கள், சிறிய நீர்ப்பாசன காணிகள் என 4,500 விவசாயிகளால் பெரும்போக விவசாய செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .