Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்படும் வட்டவான் இறால் வளர்ப்புத் திட்டத்தில், வாகரை பிரதேச பயனாளிகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென, வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயன்பாடு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
அத்தோடு, இறால் உற்பத்தியில் அதிகரிக்க அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் ஊக்குவிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில், வட்டவான் இறால் வளர்ப்புத் திட்டத்தை, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (26) பார்வையிட்டார்.
இதன்போது, அமைச்சர் டக்ளஸுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் வளம் சார்ந்த பிரதேசங்களில் மீன் வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்புத் திட்டங்கள் அதிகரிப்பது தொடர்பில், அமைச்சர் டக்ளஸிடம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் யோசனைகளையும் முன்வைத்தார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் மற்றும் பனிச்சங்கேணி ஆகிய பிரதேசங்கள் கடற்றொழில் மற்றும் உயிரியல் வளம் திணைக்களத்தினூடாக 100 ஏக்கர் நிலப்பரப்பில் இறால் வளர்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கள விஜயத்தில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்த் மற்றும் கடற்றொழில், நீரியல் வள திணைக்கள உயர் மட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
8 hours ago