2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இரு நாட்களில் 20 ஜனாசாக்கள் நல்லடக்கம்

Princiya Dixci   / 2021 மார்ச் 07 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடியில் கடந்த இரண்டு நாட்களில் 20 ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி  பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணமடைந்தவர்களின் ஜனாசாக்களை (சடலங்கள்), ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட காகித நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சூடுபத்தின சேனை பகுதியில் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடக்கம் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக ஓட்டமாவடி பிரதேச சபையால் அடையாளப்படுத்தப்பட்ட காணியில் இந்த ஜனாசாக்கள்  நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 5ஆம் திகதி 09 ஜனாசாக்களும், நேற்று (06) சனிக்கிழமை நள்ளிரவு வரை 11 ஜனாசாக்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமையன்று, மட்டக்களப்பு - கோட்டைமுனை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை அகிய பகுதிகளில் மரணித்த தலா ஒருவரின் ஜனாசாக்களும் ஏறாவூர் மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் மரணித்த தலா இருவரின் ஜனாசாக்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

நேற்று மாளிகாவத்தை, கஹட்டோவிட்ட,  பம்மன்ன,  திஹாரிய, அநுராதபுரம், அக்குரன, மாத்தளை, அம்பதென்ன அகிய பகுதிகளில் மரணித்த தலா ஒருவரின் ஜனாசாக்களும் நிட்டம்புவயில் மரணித்த மூவரின் ஜனாசாக்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X