Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 மார்ச் 05 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழைபெய்து வருகின்ற நிலையில் பெரும்பாலான தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள தாள் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனால் பல வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க அப்பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டிருப்பு, எருவில் பகுதியில் தேங்கிநிற்கும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு மண்முனை தென் எருவில் பிரதேச சபையினர் பெக்கோ இயந்திரத்துடன் குறித்த இடத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்திருந்தனர்.
எனினும் வெள்ள நீரை வெளியேற்றுவது தொடர்பில் பட்டிருப்பு மற்றும் எருவில் கிராம மக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
அவ்விடத்திற்கு வருதை தந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சா.அறிவழகன், கிராம சேவை உத்தியோகஸ்த்தர், களுவாஞ்சிகுடி பொலிசார் விஜயம் செய்து நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
இறுதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபேய விக்கிரம ஸ்தலத்திற்கு விஜயம் செய்து இரு கிராமத்தவர்களுடனும் கலந்துரையாடி மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் வெள்ள நீரை வெளியேற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியதற்கிணங்க பிரதேச சபையினரால் வெள்ளநீர் வட்டி வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago
27 minute ago