2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இராணுவத்தில் இணைந்து சேவையாற்ற அழைப்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை இராணுவத்தில் இணைந்து நாட்டுக்காகச் சேவையாற்ற காத்தான்குடியில் விருப்பமுள்ள இளைஞர்கள் முன்வருமாறு, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை இராணுவத்துக்குள்  இளைஞர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எமது பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களை, இலங்கை இராணுவத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகப் பரீட்சை, காத்தான்குடி, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நாளை மறுதினம் (18) காலை 10 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அவரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “18 தொடக்கம் 26 வயதுக்குட்பட்டவராக உயரம் 5 அடிக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 10ஆம் ஆண்டு சித்தியடைந்தவராகவும் கல்விப் பொதுத் தராதரம், உயர் தரம் சித்தியடைந்தவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் இராணுவத்தின் விசேட பிரிவுகளில் தெரிவாகும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

“நேர்முகப்பரீட்சையின்போது அடையாள அட்டைப் பிரதி, பிறப்புச் சான்றிதல் பிரதி, பாடசாலை விடுகைப் பத்திரம், கிராம சேவகரின் நற்சான்றிதழ், விளையாட்டு மற்றும் ஏனைய தகமைகள் இருப்பின் அது தொடர்பான சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.

“இலங்கை இராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக சேவையாற்ற விருப்பமுள்ளவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .