2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இரவில் பயணித்த சிறுமி சந்தேகத்தில் கைது

Janu   / 2025 ஜனவரி 29 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பொலன்னறுவை நோக்கி பிரயாணிக்க காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக இருந்த காத்தான்குடியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர்  புதன்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

தாயார் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றுள்ள நிலையில் தந்தையின் பராமரிப்பில் இருந்த  குறித்த சிறுமி சம்பவதினமான புதன்கிழமை (28) இரவு   வீட்டை விட்டு வெளியேறி கல்முனையில் இருந்து  பொலன்னறுவை நோக்கி பயணிக்கும் தனியார் பஸ் வண்டியில் ஏறியுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பஸ் வண்டியை நிறுத்தி குறித்த பஸ்ஸில் பிரயாணித்த  நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் தனியாக பிரயாணித்த சிறுமி மீது அங்கிருந்த ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார்  சிறுமியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது   ஏற்கனவே அவர்  இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இவரை சிறுவர் இல்லத்தில் அனுமதித்து  பின்னர் தந்தையர் தான் பராமரிப்பதாக பொறுப்பேற்று அவரின் பராமரிப்பில் இருந்து வருகின்றமை தெரியவந்துள்ளது.  அண்மையில் புத்தளத்திலுள்ள அவரின் மாமியார் வீட்டிற்கு சென்று வந்துள்ளதாகவும்   அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சென்று வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஓப்படைப்பதற்காக  நீதிமன்றில் அனுமதியை பெறுவதற்காகன நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கனகராசா சரவணன்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .