Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 07 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், அலுவலக உத்தியோகத்தர்களால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில், நேற்று திங்கட்கிழமை (6) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ்வலுவலகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஆண்டு இதே தினத்தில் மரணமடைந்திருந்தார். அவ்வாறு மரணமடைந்த அமரர் செ.ஜெயகாந்தன் குரூஸ் என்பரின் ஓராண்டு நினைவினை முன்னிட்டு, மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவினால் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மாவட்ட செயலகத்தில் உள்ள அனைத்து கிளைகளின் அலுவலர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானத்தை வழங்கிவைத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேற்றுப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்குத் தேவையான இரத்த தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக இந்த இரத்த தானம் வழங்கப்பட்டது.
போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர் குழாம் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து இவ்வுதிரங்களை சேகரித்துக் கொண்டனர்.
அலுவலக சக உத்தியோகத்தரின் நினைவாக இவ்வாறான மனித நேய பணியினை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்டமை வரவேற்கத்தக்கதும் முன்னுதாரணமுமான செயற்பாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago