Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 10 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இரட்டை பெண் சிசுக்களை பிரசவித்த சம்சுன் நிஹாரா (வயது 30) என்ற இளம் தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
செயிலான் வீதி, கல்முனைக்குடி-03 என்ற முகவரியில் வசித்து வந்த இப்பெண், கடந்த மாதம் 20ஆம் திகதி பிரசவ வலி காரணமாக மட்டக்களப்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றார்.
இதன்போது, வைத்தியரின் ஆலோசனைக்கமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திரசிகிச்சை மூலம் இரட்டை பெண் சிசுக்களை பிரசவித்தார்.
இனையடுத்து தாய் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (07) உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது
உயிரிழந்த தாய், கல்முனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரனின் உத்தரவுக்கமைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தை பார்வையிட்டார்.
அத்துடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago