Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 29, புதன்கிழமை
Mayu / 2024 ஜூலை 22 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சின் 124 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இயன் மருத்துவ பிரிவு கட்டிடத் தொகுதி ஞாயிற்றுக்கிழமை (21) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அழைப்பின் பேரில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இயன் மருத்துவ பிரிவு கட்டிடத் தொகுதியினை திறந்து வைத்தார்.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.பி.அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டீ.ஜி.எம்.கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட வைத்தியர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
றியாஸ் ஆதம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
28 minute ago
50 minute ago
1 hours ago