2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இதை செய்தால் கையேந்த வேண்டிய அவசியமில்லை

Freelancer   / 2022 நவம்பர் 29 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வடக்கு கிழக்கு மாகாணங்களில், போதுமான வளங்கள் உள்ளதாகவும் அவற்றைச் சரியான
முறையிலே பயன்படுத்தினால் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்றும்
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான
பொறியியலாளர் என். சிவலிங்கம் தெரிவித்தார்.

ஏறாவூர் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு இலாபப் பங்கும் சீருடையும் வழங்கும் நிகழ்வு
சங்கப் பணிப்பாளர் சபைத் தலைவர் எம்.எல். அப்துல்லத்தீப் தலைமையில் ஏறாவூர் கூட்டுறவுச்
சங்க கூட்டுறவு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று (29) இடம்பெற்றபோதே அவர்
இதனைத் தெரிவித்தார்.

அங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர் “மாகாணத்தில்
கூட்டுறவுச் சங்கம் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்குக் காரணம் வடக்கு,
கிழக்கில் ஏற்பட்ட அசாதாரண நிலையிலும் நாங்கள் எதற்கும் சளைத்தவர்களல்ல என்பதை
நிரூபித்திருக்கின்றோம்.

பல இடர்களைச் சந்தித்த போதும் மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே நாங்கள் மீள் எழுந்து
கொண்டிருக்கின்றோம். அதன் காரணமாகவே ஏறாவூர் கூட்டுறவுச் சங்கம் மிகவும் உன்னதமான
நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

கூட்டுறவின் அச்சாணியாக இருந்து இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பணியாளர்களும்
அதன் பணிப்பாளர் சபைத் தலைவருமே அதற்குக் காரணம். கட்டுப்பாட்டோடு இருந்து
பவணியாற்றுவதால் சாதனைகளை நிலைநாட்ட முடியும்.

சீன அரிசி வழங்கலில்; நாங்கள் பங்கெடுத்து கூட்டுறவுச் சங்கங்களின் பெயரைக் கெடுத்துக்
கொள்ளவில்லை. அந்த அரிசி தரமற்றது என்ற விமர்சனம் பரவலாக இருந்தது.” என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X