2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலத்துக்கு அடிக்கல்

Editorial   / 2022 மார்ச் 03 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன், ஜவ்பர்கான்

பெரிய கல்லாற்றில் அமைக்கப்படவுள்ள  பாலத்துக்கான அபிவிருத்தி பணிகள், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனால் நேற்று (02) அடிக்கல் நாட்டப்பட்டது.

அரசாங்கத்தின் சுபீட்ஷத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக, இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இப்பாலம் அமைக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனில் முன்மொழிவுக்கு அமைவாக கிராமிய வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.

பெரியகல்லாறு, அன்னை வேளாங்கன்னி தேவாலயத்துக்குச் செல்லும் வீதியில் மிக நீண்டகாலமாக சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட பாலமே  ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் அப்பகுதி மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே பாலம் அமைக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .