2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

இடமாற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Janu   / 2024 ஏப்ரல் 18 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீளுள்ள பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் முன்னால், பாழுகாமத்திலுள்ள மூன்று பாடசாலகளிலும் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றில்  வியாழக்கிழமை (18) ஈடுபட்டுள்ளனர் .

"குறுகிய காலத்தில் வலயத்தை முன்னேற்றிய கல்விப் பணிப்பாளர் எமக்கு வேண்டும்" "அரச அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலை உடன் நிறுத்து", "பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடான இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்", போன்ற பல வாசகங்கள் எழுதிய பாதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது .

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிவினந்தம் சிறிதரனை இடமாற்றம் செய்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மீண்டும் சி.சிறிதரனை பட்டிருப்பு வலயத்திற்கு கல்விப் பணிப்பாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, கிழக்குமாகாண ஆளுனர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் கவனத்தை ஈர்த்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது .

 வ.சக்தி      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .