Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஜனவரி 13 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட ஓந்தாச்சிமடத்திற்கும் கோட்டைக்கல்லாறு பகுதிக்கும் இடைப்பட்ட ஆற்றில் இன்று தோணியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் ஆற்றில் அள்ளுண்டுபோய் காணாமல்போயுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
குறித்த ஆற்றில் நீர் மிகவும் வேகமாக கரைபுரண்டோடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த இளைஞன் தோணியில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அவ்வேளையில் நீரோட்டத்தில் சிக்குண்டு அவரது தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது ஆற்று நீரில் அடித்துச் சென்றுள்ளதில் அவர் காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணமால் போனவர் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் வசித்துவரும், கிழக்குப் பல்கலைக் கழக மாணவன் அன அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த தோடி உடைந்த நிலையில நீர் நிரம்பியவாறு கரை ஒதுங்கியுள்ளது. எனினும் காணாமல்போன இளைஞனை மீனவர்களும், உறவினர்களும் இணைந்து தேடிவருகின்றனர்.
இந்நிலையில் இஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago