Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 நவம்பர் 02 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில், அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல் முன்னெடுத்துள்ளது என பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி,வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மாணவர்களின் சுகாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (01) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், “கொரோனா காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தன.
“மீண்டும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
“அந்த வகையில், முன்பள்ளி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“இதில் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் 223 முன்பள்ளி பாடசாலைகளுக்கு தலா ஒரு பாடசாலைக்கு 6 இலட்சம் ரூபாய் என்ற வகையில் உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
“முன்பள்ளி மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் மாதாந்த கொடுப்பனவு ஓய்வு ஊதியம் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தி கலந்துரையாடல்களை மேற்கொண்டு உள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
9 hours ago