2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

ஆயுதங்களுடன் மெலளவி மாட்டினார்

Mayu   / 2024 ஜூலை 31 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசத்தில் மௌலவி ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.  

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பதுறியா  நகரில்  மெலளவி ஒருவரை செவ்வாய்க்கிழமை (30) இரவு இரு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் வாளுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.



பொலன்னறுவ அரலகங்வில விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப்பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசிய தகவல்  ஒன்றினையடுத்து அதிரடிப்படை சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணியுமான  வருன ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய  அரலகங்வில விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (30) இரவு 10 மணிக்கு குறித்த மெலளவியின் வீட்டை சுற்றுவளைத்து சோதனையிட்டனர்.



இதன் போது வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரு ரீ 56 ரக துப்பாக்கி துப்பாக்கி ரவைகள் 59, மெகசீன் 2, பைனோ 1, வாள் 1 ஆகிய​வற்றை கைப்பற்றியதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட மௌலவியை மன்னம்பிட்டி விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டுவருவதுடன் இவரை கொழும்பிலுள்ள  பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X