2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

‘ஆயுதக் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்’

Princiya Dixci   / 2021 ஜூன் 27 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான் 

அப்பாவி இளைஞர்களின் இறப்புக்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் உட்பட பலரும் ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்து வந்திருந்தோம்” எனத் தெரிவித்த முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான், “இந்த ஆயுதக் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்என்றார்.

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற கொலைச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துரைக்கையில், “அப்பாவி இளைஞனின் உயிர் பறிக்கப்பட்ட விடயமானது ஒரு பொறுப்பற்ற விடயமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். இது முற்றுமுழுதான ஒரு கொலை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதற்கான நீதி கிடைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாங்கள் எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியுள்ளோம்.

“இக்கொலைச் சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் முன்னுக்குப்பின் முரணான செய்திகளை வெளியிட்டு, சம்பவத்தை மறைக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

“தனது வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெரா வேலை செய்யவில்லை என்பது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகும்என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .