2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2021 நவம்பர் 17 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை, கோழிக்கடை வீதியில் வைத்து, கண்ணகிபுரத்தை சேர்ந்த (வயது 38) நபரொருவரை, 1,000 போதை மாத்திரைகளுடன், நேற்று (16) கைது செய்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.சந்திரகுமார தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, வாழைச்சேனை பொலிஸ் நிலைய விசேட பிரிவினரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனைப் பகுதியில் நீண்ட நாள்களாக தச்சுத் தொழிலாளி போன்று காட்டிக் கொண்டு மிக சூட்சமான முறையில் போதை மாத்திரைகளை, சந்தேகநபர் விநியோகித்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

போதை மாத்திரைகளைக் கொண்டு வருவதற்கு சந்தேகநபர் பயன்படுத்திய சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .