2025 பெப்ரவரி 06, வியாழக்கிழமை

ஆபரணங்களை மீட்கச் சென்றவரை தாக்க முயன்ற ஊழியர்

Janu   / 2025 ஜனவரி 06 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகு வைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்து தாக்குவதற்கு முயன்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில் ,  

“எமது தேவைகளுக்காக எம்மிடமிருந்த தங்க ஆபரணங்களை களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 19 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்திருந்தோம். பின்னர் அதனை மீட்பதற்கு வெள்ளிக்கிழமை(03) அன்று ஒரு மணி அளவில் நாம் பணத்துடன் உரிய நிறுவனத்திற்குச் சென்று வட்டியும் முதலுமாக கணக்குப் பார்த்தபோது 20 லட்சம் ரூபாய் மொத்த தொகையாக கூறினார்கள்.

 நாம் 20 லட்சம் ரூபாய் காசு கொண்டு வந்துள்ளோம் எமது நகைகளை தருமாறு கோரினோம். இப்போது உங்களது நகைகள் தர முடியாது ஏன் அவசரமாக மீட்கப் போகின்றீர்கள் இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும் திங்கட்கிழமை தருகின்றோம் எனக் கூறினர். இல்லை எமக்கு அவசரமாக எமது ஆபரணங்கள் தேவை, உங்களுடைய வட்டியும் முதலுமாக கொண்டு வந்திருக்கின்றோம் என கூறியும் அவர்கள் எமது நகைகளை தர மறுத்துவிட்டார்கள். பின்னர் நாம் வீட்டிற்கு சென்றுவிட்டோம்.

மீண்டும் அன்றைய தினம் 2 மணியளவில் போய் நாம் உங்களிடம் அடகு வைத்த ஆபரணங்களை மீட்பதற்காக வந்துள்ளோம். எம்மிடமுள்ள நிதியை நீங்கள் பெற்று விட்டு எமது ஆபரணங்களை தருமாறு கோரிய போது அந்த நிதி நிறுவனத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர் ஒருவர் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்து என்னைத் தாக்க முயன்றார்.

இவ்விடயம் தொடர்பில் நாம் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். ” என தெரிவித்துள்ளார்.

குறித்த நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தமக்கு மாத்திரமின்றி இன்னும் பல மக்களுக்கு இவ்வாறு செய்துள்ளதாகவும், எம்முடைய தங்க நகைகள் அவர்களிடத்தில் இன்னும் சில நாட்களுக்கு இருக்குமாக இருந்தால் வட்டி காசு அதிகரிக்கும் என்ன நோக்கத்தில் இவ்வாறு செய்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

வ.சக்தி

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X