Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் பிரதேச செயலாளர்களைத் தெளிவூட்டும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றனர்.
இந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களைத் தெளிவூட்டும் செயலமர்வொன்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகார பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரோஷன் வீரசூரிய கலந்துகொண்டு, பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களைத் தெளிவுபடுத்தினார்.
பிரதேச செயலக ரீதியில் மின் இணைப்புகளை வழங்கும்போது ஏற்படும் பிரச்சனைகள், பிரதேச செயலாளர்களுக்கு உள்ள சட்டபூர்வமான அதிகாரங்கள் மற்றும் அவ்வாறான அதிகாரங்கள் ஊடாக பிரச்சனைகளுக்கு எவ்வாறான தீர்வை பெற்றுக்கொடுக்க இயலும் என்பவை தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன.
இச்செயலமர்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்டச் செயலக உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள்
கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
46 minute ago