2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

ஆடுகளை கடத்திய இருவர் கைது

Mayu   / 2024 ஜூன் 06 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

அதிகளவிலான ஆடுகளை சிறிய படி ரக வாகனம் ஒன்றில் நீண்ட தூரம் கடத்தி வந்த இருவரை வியாழக்கிழமை (06) மிருகவதை சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்கா தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்டத்தின் மிகுந்தலை பிரதேசத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்கு சுமார் 20 ஆடுகளை சிறிய படி வாகனத்தில் கடத்தி வந்து கொண்டிருந்தபோதே இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காத்தான்குடி பிரதான வீதியில் வைத்து மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் நடத்திய திடீர் தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆடுகளையும் சந்தேக நபர்களையும் கைது செய்த மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதோடு குறித்த சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X