2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அறுவடையில் இராஜாங்க அமைச்சர்

Editorial   / 2021 நவம்பர் 08 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன்

மட்டக்களப்பு, கடுக்காமுனை, வில்லுக்குளத்து நீரைப் பயன்படுத்தி, இடைப் போகத்தை மேற்கொள்வதற்கு அப்பகுதி விவசாயிகளுக்கான அனுமதியை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பெற்றுக்கொடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இம்முறை 95 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டமையால் அப்பகுதியை சேர்ந்த 63 விவசாயக் குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

குறித்த பகுதியில் செய்கை பண்ணப்பட்ட வயல்களை அறுவடை செய்யும் விழாவுக்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, அறுவடையையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .