Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 நவம்பர் 18 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான்
மட்டக்களப்பு - பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவின் முதலைக்குடா, மகிழடித்தீவு ஆகிய பிரதேசங்களில் இறால் மற்றும் மீன் வளர்ப்புத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கேற்ற காணிகளாக இனங்காணப்பட்ட 381 ஏக்கர் அரச காணிகளில் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையை (ஈ.ஐ.ஏ) பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், நவீன முறையில் இறால் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசின் விசேட திட்டத்தை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைங்களங்களுடன் கலந்தாலோசிக்கும் விசேட காணி பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம், மாவட்ட செயலாளர் க.கருணாகரன் தலைமையில், மாவட்டன் செயலகத்தில் இன்று (18) நடைபெற்றது.
இதன்போது, அடையாளங் காணப்பட்ட முதலைக்குடா, மகிழடித்தீவு ஆகிய பிரதேசங்களிலுள்ள 381 ஏக்கர் அரச காணியில் ஈ.ஐ.ஏ. அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவும், நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்ட வரைபைத் தயாரிக்கவும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபைக்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், வனவளத் திணைக்களம், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகள் குழு காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் விசேட களவிஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தக் களவிஜய அறிக்கையின் அடிப்படையில் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago