2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அரச ஒசுசல கிளை ஒன்றை திறக்குமாறு கோரிக்கை

Freelancer   / 2022 மே 05 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் நகரில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் (அரச ஒசுசல) கிளை ஒன்றினை திறக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரச ஒசுசல கிளை ஒன்று இல்லாமையினால் தமக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொத்துவில், லாகுகல, பாணம, கோமாரி ஆகிய பிரதேசங்களில் சுமார் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அவர்களுக்கு தேவையான மருந்து வகைகளை  தனியார் மருந்து விற்பனை நிலையங்களிலேயே கொள்வனவு செய்து வருகின்றனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, அவசரத் தேவைகளுக்கு மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நோயாளிகள் அரச ஒசுசலவில் மருந்தைக் கொள்வனவு செய்வதற்கு சுமார் 40 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் நோயாளர்கள் பல அசௌகரீகங்களை எதிர்கொள்வதோடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும் பொத்துவில் பிரதேசத்தில் அரச ஒசுசல திறக்காமையையிட்டு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .