Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 25 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் வானிலை மாற்றத்துக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்துக்கு 200 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு விவசாயப் பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராசா தெரிவித்தார்.
வந்தாறுமூலை விவசாய விரிவாக்கல் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட விவசாய முயற்சியாளர்களான பெண் பயனாளிகளுக்கு விவசாய உபகரணத் தொகுதிகள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு வடக்கு வலய விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் தலைமையில், இன்று (25) நடைபெற்றது.
இந்நிகழ்வில், சித்தாண்டி வந்தாறுமூலை ஆகிய வலயங்களின் பெண்கள் விவசாய அமைப்பைச் சேர்ந்த 40 விவசாயப் பெண்களுக்க தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இதில் வானிலை மாற்றத்துக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.எம். ஆரியதாஸ, விவசாயப் பேதனாசிரியர்களான தெய்வமனோஹரி ரமேசன், பி.ரவிவர்மன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ. ரவிராஜ் உட்பட விவசாயப் பெண்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
47 minute ago
53 minute ago
2 hours ago