Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்றையதினம் (01) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேன்துரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
மேலும், இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இராசமாணிக்கம் சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம், மற்றும் களுவாஞ்சிகுடி பொலிசார், ஏனைய திணைக்களம், மற்றும் அதிகார சபைகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்களின் கோரிக்கைகள், தேவைகள் குறித்தும் அவற்றை நிவர்த்தி செய்து கொடுப்பது தொர்பாகவும் ஆராயப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago