Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 மார்ச் 19 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
அகிம்சை ரீதியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த முதல் பெண் என்ற பெருமையினைக் கொண்ட அன்னை பூபதியின் அகிம்சை போராட்ட ஆரம்ப நாளான நேற்றையதினம் (19) அன்னை பூபதியின் பிள்ளைகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மற்றும் புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வத்து, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் குருந்தை மரநிழலில் 1988ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை அன்னை பூபதி ஆரம்பித்தார்.
மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டாத்தால் விடுதலை பெற்ற பாரத நாடு என்று வரலாறு கூறப்படும் இந்திய நாடு, அன்னை பூபதியின் அகிம்சைவழி போராட்டத்தை கணக்கில் எடுக்கவில்லை.
முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.
பத்துப் பிள்ளைகளுக்கு தாயான இவர், நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது.
ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின்னர் 19.04.1988 அன்று காலை 8.45, மணிக்கு அவர் உயிர் நீத்தார்.
அன்னை பூபதியின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய நாளில் மட்டக்களப்பு நாவலடியில் அன்னை பூபதியின் நினைவுத்தூபியில் அன்னை பூபதியின் பிள்ளைகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உட்பட அன்னை பூபதியின் உறவினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
36 minute ago
40 minute ago
4 hours ago