Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இருந்து வவுணதீவு பிரதேசத்துக்கு வியாபாரத்துக்காக இரு வேறு பகுதிகளில் இரு மோட்டார் சைக்கிளில் 80 லீற்றர் கசிப்பை கடத்திச் சென்ற 4 பேரும், சட்டவிரோதமாக பெக்கோ இயந்திரத்தின் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவருமென 5 பேரை வவுணதீவில் வைத்து நேற்று (09) ஞாயிற்றுக்கிமை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி ஆலோசனைக்கமைய குற்றவி சாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் சம்பவதினமான நேற்று மாலை வவுணதீவ புளியடிமடு மற்றும் காஞ்சரம்குடா சந்தியில் இருகுழுக்களாக வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது கொக்கட்டிச்சோலையில் இருந்து வவுணதீவுக்கு மோட்டர்சைக்கிள் 25 லீற்றர் கலன் ஒன்றில் கசிப்பை கடத்திக் கொண்டுவந்த இருவரை புளியடிமடுவில் வைத்து கைது செய்தனர். அதேவேளை அவ்வாறே காஞ்சரம் குடா சந்தியில் வைத்து கசிப்பு கடத்தி வந்த இருவர் உட்பட நான்கு பேரை 80 லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன் இரு மோட்டர் சைக்கிள்களையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்வர்கள் கொக்கட்டிச்சோலை, பனையறுப்பான், முனையக்காடு, சில்லுக்கொடிச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த 38,22,28 மற்றும்18 வயதுகளை உடையவர்கள் ஆவர்.
இதேவேளை, பாவற்கொடிச்சேனை சிவன்கோவில் வீதியிலுள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாக பக்கோ இயந்திரம் கொண்டு மணல் அகழ்வில் ஈடுபட்ட 22 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் பக்கோ இயந்திரத்தை மீட்கப்பட்டுள்ளதுடன் இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago