2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

அடையாளம் காணப்படாத நபரின் உடல் நல்லடக்கம்

Freelancer   / 2024 ஏப்ரல் 02 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடையாளம் காணப்படாத நபரொருவரின் உடல் செவ்வாய்க் கிழமை (2) ஓட்டமாவடி - மஜ்மா நகர் கொவிட் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரெவரி மாதம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 60 வயது மதிக்கத்தக்க நபரொருவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

குறித்த நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நிலையில் உடல் நீண்ட நாட்களாக அடையாளம் காணப்படாமல் வைத்தியசாலை குளிர்காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நபரின் உடலை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் வைத்தியசாலையிலிருந்து எடுத்து, வாழைச்சேனை பொலிஸார், கிராம உத்தியோகத்தர் எம். அஸ்வர் ஆகியோரின் மேற்பார்வையில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .