2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அடுத்தாண்டில் புதிய திட்டங்கள்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஹஸ்பர் ஏ ஹலீம்

அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக, கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இதற்கமைவாக, அடுத்தாண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் புதிய திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில், மட்டக்களப்பு  மாவட்டச் செயலகத்தில் நேற்று (16) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வனிகசிங்க,  திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோரள, அம்பாரை மாவட்டச் செயலாளர் மாவட்ட  டீ.எம்.எல். பண்டாரநாயக உட்பட கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அமுல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பான சம்மந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள், அனைத்து திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மக்கள் மயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வளங்களையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, மக்களினதும் மாகாணத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் புதிய திட்டங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.

குளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை, கற்றொழில், நன்னீர் மீன்வளர்ப்பு, சிறு கைத்தொழில், ஆடைஉற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை  அபிவிருத்தி போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .