Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 16 , பி.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதான வீதியில் அமைந்திருந்த மேற்படி தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென அலுவலகத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியில் மொட்டுச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத்தில் போட்டியிட்ட எம் ஐ அப்துல் வஹ்ஹாப் என்பவருக்கு சொந்தமான இந்த அலுவலகமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .