2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

58 துப்பாக்கி ரவைகள் மீட்பு

Janu   / 2024 மே 12 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 58 துப்பாக்கி ரவைகள் சனிக்கிழமை (11) இரவு மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கமைய இருதயபுரம் சமுர்த்தி வங்கி கட்டிடத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த 58  ரி.56 ரக துப்பாக்கி  ரவைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது .

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக குற்றப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .