Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 12 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,313 ஆதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன், இன்று (12) தெரிவித்தார்.
அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், வாழைச்சேனை, பட்டிப்பளை, செங்கலடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 3 பேருக்கும். களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில், கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்த இருவரின் நேரடி தொடர்புடைய உறவினர்களான ஆரையம்பதியில் 7 பேருக்கும், அவ்வாறே மட்டக்களப்பு மாங்கத்தில் 7 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, மாவட்டத்தில் 3ஆவது கொரோனா அலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளதுடன், 7 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago