Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 மார்ச் 11 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு நிருபர் சகா
கல்முனையில் வீடு புகுந்து திருட்டில் ஈடபட்ட நபர் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு, கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கல்முனை வைத்தியசாலை வீதியில் வசிக்கும் ஒலுவில் துறைமுகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த திருடன், மேசையில் இருந்த மணிபேர்ஸை திருடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சிசிடிவி கெமராவின் உதவியுடன்,குறித்த நபர் நற்பிட்டிமுனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை தமிழ்ப் பிரதேசத்தில் 24 மணிநேரத்துள் திருடனைக் கண்டுபிடித்தமை இதுவே முதற்தடவையாகும். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago