Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 21 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தங்களை தடுக்கும் நோக்குடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் மாவட்ட செயலகமும் இணைந்து இளைஞர் யுவதிகளுக்கு இடையே 200 மணித்தியால புதிய வேலை திட்டமொன்று இன்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எஸ் எம் ரியாஸ் தலைமையில் நடைபெற்ற அனைத்து முகாமைத்துவ வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு காத்தான்குடி ஆரையம்பதி ஆகிய மூன்று பிரதேச செயலகங்களில் இருந்து 90 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ஒரு மாத காலங்களைக் கொண்ட 200 மணித்தியால குறித்த அனைத்து முகாமைத்துவ வேலைத்திட்ட செயலமர்வுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது
இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களின் போது எவ்வாறு செயல்படுவது என்பதே தொடர்பாக 200 மணித்தியாலங்கள் குறித்த இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
4 hours ago
5 hours ago